sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பழங்கால நாணய கண்காட்சி

/

பழங்கால நாணய கண்காட்சி

பழங்கால நாணய கண்காட்சி

பழங்கால நாணய கண்காட்சி


ADDED : ஆக 18, 2024 03:38 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: பழங்கால நாணயங்கள், அஞ்சல் தலைகள், கலை

பொருட்கள் மற்றும் வரலாறு குறித்த கண்காட்சி தர்மபுரியில் நடக்கிறது.

தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டியில், தனியாருக்கு சொந்தமான வின்சென்ட் திருமண மண்டபத்தில், பழங்கால நாணய கண்-காட்சி கடந்த இரு தினங்களாக நடந்து வருகிறது. இதில், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பயன்படுத்திய நாணயங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து, சென்னை நாணயங்கள் அமைப்பின் தலைவர் சென்னை மணிகண்டன் கூறுகையில், ''இதுபோன்ற நாணய கண்-காட்சி மாணவ சமூகத்திற்கு பெருமளவில் பயன்படக்கூடியது. மேலும், அறிவை மேம்படுத்த, ஒப்பிட்டு பார்க்கும் பண்பை வளர்க்க, வரலாற்றோடு இணைந்து கொள்ளுதல், நினைவு கூறும் தன்மையை பெருக்குதல் உள்ளிட்டவை நாணயம் சேகரிப்பின், மூலம் கிடைக்கும். இதில், மறைந்த முன்னாள், 'தினமலர்' ஆசி-ரியரான கிருஷ்ணமூர்த்தியால் கண்டுபிடிக்கப்பட்ட, சங்ககால பாண்டிய மன்னன் பெருவழுதி நாணயம், காட்சி படுத்தப்பட்-டுள்ளது. இக்கண்காட்சி, தர்மபுரி மாவட்டத்தில் முதல் முறை-யாக, முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது. கடந்த, 2 நாட்கள் நடந்து முடிந்த நிலையில், இன்றிரவு, 7:00 மணி வரை நடக்கிறது. இதை பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் இதை பயன்படுத்தி கொள்ளலாம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us