/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாணவியர் பலாத்கார சம்பவத்தில் மேலும் ஒரு பள்ளி முதல்வர் கைது
/
மாணவியர் பலாத்கார சம்பவத்தில் மேலும் ஒரு பள்ளி முதல்வர் கைது
மாணவியர் பலாத்கார சம்பவத்தில் மேலும் ஒரு பள்ளி முதல்வர் கைது
மாணவியர் பலாத்கார சம்பவத்தில் மேலும் ஒரு பள்ளி முதல்வர் கைது
ADDED : செப் 03, 2024 05:21 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாணவியர் பலாத்கார சம்பவத்தில், மேலும் ஒரு பள்ளி முதல்வர் கைதாகி உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் தனியார் பள்ளியில் என்.சி.சி., முகாம் என்ற பெயரில் போலி முகாம் நடத்தியதில், போலி பயிற்சியாளர் சிவராமன் உட்பட, 11 பேர் கைதாகினர். கைது செய்யும் முன் எலி மருந்து தின்ற சிவராமன் கடந்த மாதம், 23ல் இறந்தார். கடந்த ஜன., மாதம் மற்றொரு பள்ளியில் போலி என்.சி.சி., முகாம் நடத்தியதும், 14 வயது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் மேலும் ஒரு புகார் வந்தது. இது குறித்து விசாரிக்க போலீஸ் ஐ.ஜி., பவானீஸ்வரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வரு-கின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும் மற்றொரு பள்ளியிலும், இதுபோன்ற போலி என்.சி.சி., முகாம் நடந்த விவகாரத்தில், அப்பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்-டுள்ளார். இது குறித்து போலீசார் கூறுகையில், 'தனியார் பள்ளி-களில் நடந்த முகாம்கள் குறித்து, பல்வேறு புகார்கள் வந்தாலும், உண்மை தன்மை குறித்து அறிந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை, இச்சம்பவங்களில் தொடர்புடைய, 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் விசாரணை நடந்து வரும் நிலையில், இறுதி அறிக்கையில் முழு விபரங்கள் தெரிவிக்கப்படும்' என்றனர்.