/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கால்வாயில் மண் கொட்டி அடைப்பு தேங்கி நிற்கும் சாக்கடை கழிவு நீர்
/
கால்வாயில் மண் கொட்டி அடைப்பு தேங்கி நிற்கும் சாக்கடை கழிவு நீர்
கால்வாயில் மண் கொட்டி அடைப்பு தேங்கி நிற்கும் சாக்கடை கழிவு நீர்
கால்வாயில் மண் கொட்டி அடைப்பு தேங்கி நிற்கும் சாக்கடை கழிவு நீர்
ADDED : ஜூலை 01, 2024 04:06 AM
தர்மபுரி: அதியமான்கோட்டை அருகே, சாக்கடை கால்வாயில், மண் கொட்டி அடைக்கப்பட்டதால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை பஞ்., உட்பட்ட வடக்கு தெரு கொட்டவூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுநீர் வெளியேறுவதற்காக, புதிதாக கால்வாய் கட்டப்பட்டது. இதில், வடக்கு தெரு கொட்டவூர் பகுதியிலிருந்து, 600 மீட்டர் நீளத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன், 45 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. இந்நிலையில், அதியமான்கோட்டையிலுள்ள வானொலி நிலையம் முன், ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தில், தங்கும் விடுதி கட்டும் பணிகள் நடக்கிறது.
இப்பணியை செய்யும் ஒப்பந்ததாரர் கட்டட பணிக்கான பொருட்கள் கொண்டு செல்ல மற்றும் வாகனங்கள் செல்ல, கழிவுநீர் கால்வாயில் மண் கொட்டி மூடி, சாலை அமைத்துள்ளார். இதனால், கால்வாயில், 300 மீட்டர் துாரம் வரை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக, வடக்கு தெரு கொட்டாவூர் பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மண் கொட்டி அடைக்கப்பட்ட பகுதியில், சிமென்ட் குழாய்கள் பதித்து, கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.