ADDED : ஆக 17, 2026 03:22 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவ
மனையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனை இணைந்து ரத்த தான முகாமை நடந்தியது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் ஜகாங்கீர் தலைமை வகித்தார்.
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி ரத்த பிரிவு டாக்டர் கன்யா, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனை டாக்டர் அருண், இன்ஸ்பெக்டர் மஞ்சுளா ஆகியோர் ரத்த தான முகாமை தொடங்கி வைத்து ரத்த தானம் செய்வதின் நோக்கம், அதன் பயன் குறித்து பேசினர். இதில், 80க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.
