/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு துவக்கப்பள்ளியில் மீண்டும் 5 நாட்களுக்கு பின் காலை உணவு
/
அரசு துவக்கப்பள்ளியில் மீண்டும் 5 நாட்களுக்கு பின் காலை உணவு
அரசு துவக்கப்பள்ளியில் மீண்டும் 5 நாட்களுக்கு பின் காலை உணவு
அரசு துவக்கப்பள்ளியில் மீண்டும் 5 நாட்களுக்கு பின் காலை உணவு
ADDED : ஜூன் 30, 2024 01:46 AM
தர்மபுரி, நல்லம்பள்ளி அருகே, 5 நாட்களாக மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படவில்லை. 'காலைக்கதிர்' செய்தி எதிரொலியால், மீண்டும் நேற்று முதல், உணவு வழங்கபட்டது.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பாகலஹள்ளி பஞ்., உட்பட்ட மருளுகாரன்கொட்டாய் பகுதியிலுள்ள அரசு துவக்கப் பள்ளியில், 21 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த, 24 முதல் சமையலர்கள் வராததால், நேற்று முன்தினம் வரை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படவில்லை. இது குறித்த செய்தி, நம் 'காலைக்கதிர்' நாளிதழில் நேற்று வெளியானது. இதில், நல்லம்பள்ளி மகளிர் திட்ட இயக்க வட்டார மேலாளர் ரமேஷ் சம்மந்தபட்ட பள்ளி
யில் நேற்று காலை ஆய்வு செய்து, உடனடியாக சமையலர்களை நியமித்து, காலை உணவு தயார் செய்தனர். தொடர்ந்து, பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு, 5 நாட்களுக்கு பின் நேற்று, காலை உணவு வழங்கபட்டது.