/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலை விபத்தை தடுக்க போக்குவரத்தில் மாற்றம்
/
சாலை விபத்தை தடுக்க போக்குவரத்தில் மாற்றம்
ADDED : ஜூலை 14, 2024 02:50 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதி களில் விபத்தை தடுக்க, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி, தொப்பூர் கணவாய் பகுதியில் தினமும் விபத்து ஏற்-பட்டு வருகிறது. இதில், உயிரிழப்பு மற்றும் பலர் படுகாயம் அடைகின்றனர்.
இங்கு விபத்தை தடுக்க, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், கட்-டமேடு முதல் தொப்பூர் வரையுள்ள வளைவு சாலையில், தடுப்-புகள் அமைக்கப் பட்டுள்ளது. இதில் இடது புறத்தில் லோடு லாரி, கன்டெய்னர் உள்ளிட்ட கனரக வாகனங்களும், வலதுபு-றத்தில் கார், ஆட்டோ, மினி வேன் உள்ளிட்ட இலகு ரக வாக-னங்களும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்க வலியுறுத்தி, ஒலி பெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர். அதன்படி, வாகன ஓட்-டிகளும் தற்போது வேகத்தை குறைத்தும், தங்களுக்கு உரிய பாதைகளிலும் சென்று வருகின்றனர்.