/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
/
திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : செப் 08, 2024 12:59 AM
தர்மபுரி, செப். 8-
நல்லம்பள்ளி ஒன்றியத்தில் நடந்து வரும், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேற்று முன்தினம், கலெக்டர் சாந்தி ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், ஏ.ஜெட்டிஅள்ளி பஞ்., உட்பட்ட தேங்காமரத்துப்பட்டி அங்கன்வாடி மையத்தை, கலெக்டர் சாந்தி ஆய்வு செய்து, சமையலறை, குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார். அதன் அருகிலுள்ள நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஓட்டப்பட்டி பகுதியில், 9.96 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, குடிநீர் குழாய் அமைப்பதை ஆய்வு செய்து பணிகளை, குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில், நல்லம்பள்ளி பி.டி.ஓ., சர்வத்தமன், லோகநாதன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.