ADDED : ஜூலை 14, 2024 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தமிழக, காங்., தலைவர் செல்வப்பெருந்தகையை அவதுாறாக பேசிய பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து, தர்மபுரி, டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் ஆர்ப்-பாட்டம் நடந்தது.
மாவட்ட மகிளா, காங்., தலைவர் காளி-யம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் தீர்த்த-ராமன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். ஐ.என்.டி.யூ.சி., மாவட்ட தலைவர் மோகன் முன்னிலை வகித்தார்.