/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.31 லட்சத்துக்கு அரூரில் பருத்தி ஏலம்
/
ரூ.31 லட்சத்துக்கு அரூரில் பருத்தி ஏலம்
ADDED : ஆக 06, 2024 02:16 AM
அரூர், அரூர், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று, 31 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது.
தர்மபுரி மாவட்டம், அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இருந்து, 182 விவசாயிகள், 260 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், பி.டி., ரகம் குவிண்டால், 6,869 முதல், 7,406 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 260 குவிண்டால் பருத்தி, 18 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல், அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று இ-நாம் மூலம் பருத்தி ஏலம் நடந்தது. இதில், 150 விவசாயிகள், 180 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 6,659 முதல், 7,532 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 180 குவிண்டால் பருத்தி, 13 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.