/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆடி மாதத்தில் அரூரில் பத்திர பதிவுகள் 'டல்'
/
ஆடி மாதத்தில் அரூரில் பத்திர பதிவுகள் 'டல்'
ADDED : ஜூலை 24, 2024 02:17 AM
அரூர்';அரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, சிக்களூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி, ஏ.கே.தண்டா, வள்ளிமதுரை, மாம்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, வாச்சாத்தி என எல்லை பரந்து விரிந்துள்ளது.
இப்பகுதியை சேர்ந்தவர்கள் கிரயம், ஒப்பந்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம், உயில், செட்டில்மெண்ட் உள்ளிட்டவைகளை அரூர் சார்பதிவாளர் அலுவலகத்திலேயே மேற்கொள்ள வேண்டும். கடந்த ஜூலை, 17ல் ஆடி மாதம் துவங்கியதால், பத்திரப்பதிவு மிகவும் மந்தமாக இருந்து வருகிறது. இது குறித்து பத்திர எழுத்தர்கள் கூறுகையில், 'ஆடி மாதம் என்பதால் பத்திரங்கள் பதிவு செய்ய மக்கள் தயக்கம் காட்டுவர். இதனால், ஆடி மாதம் முழுவதும் பத்திரப்பதிவு மிகவும் மந்தமாக இருக்கும். வழக்கமாக முகூர்த்த நாளில் நாளொன்றுக்கு, 40 முதல், 55 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. தற்போது, ஆடி மாதம் என்பதால் நாளென்றுக்கு, 5 முதல், 10க்கும் குறைவான அளவிலேயே பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.