/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வெப்பத்தை தணித்த திடீர் மழையால் மகிழ்ச்சி
/
வெப்பத்தை தணித்த திடீர் மழையால் மகிழ்ச்சி
ADDED : மே 04, 2024 07:19 AM
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தொடர் வெப்பநிலையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில், பொதுமக்களின் நலன் கருதி காலை, 11:30 முதல் மாலை, 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தர்மபுரி மாவட்டத்தில், ஆங்காங்கே மழை பெய்தது.
இதில் மாரண்டஹள்ளி, பாலக்கோடு பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. பாலக்கோடு பகுதியில், 11.4 மி.மீ., மாரண்டஹள்ளியில், 9 மி.மீ., தர்மபுரியில், 3 மி.மீ., மழை பெய்தது. மழையால் பாலக்கோடு, மாரண்டஹள்ளி பகுதியில் ஓரளவிற்கு வெப்பம் தணிந்திருந்தது.