/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 28, 2024 01:03 AM
தர்மபுரி, பாலக்கோடு பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டக்கிளை தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். இதில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை நிறைவேற்ற, போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். ஊரக வீடுகள் பழுது நீக்கம் செய்தல் திட்டத்திற்கும், உரிய பணியிடங்கள் வழங்க வேண்டும். பயனாளர்கள் தேர்வு சார்பாக, திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு, இத்திட்டத்தை செயல்படுத்த போதிய கால அவகாசம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர். பி.டி.ஓ.,க்கள் விமலன், ஜெகதீசன், மாவட்ட தணிக்கையாளர் சதீஷ் கலந்து கொண்டனர்.
* அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் சஞ்சீவன் தலைமை வகித்தார். மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், வட்ட தலைவர் கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
* பாப்பிரெட்டிப்பட்டி வட்ட கிளை சார்பில் பி.டி.ஓ., அலுவலகம் முன்பு, வட்ட செயலாளர் ராமஜெயம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் கோபிநாத், பி.டி.ஓ., ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் தர்மன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட துணைச்செயலாளர் தீபா நன்றி கூறினார்.