ADDED : செப் 29, 2026 06:33 AM
காரிமங்கலம்; ஹிந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து, விசுவ ஹிந்து பரிக்ஷத் சார்பில், காரிமங்கலம் பஸ் ஸ்டாண்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
வி.எச்.பி., மாவட்ட இணை செயலாளர் பூபாலன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரமேஷ்பிரபு கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தென் பாரத மந்திர் அர்ச்சக புரோகித் அமைப்பாளர் சரவண கார்த்தி, இந்து சமய அற-நிலையத்துறை அதிகாரிகளின் போக்கை கண்-டித்து பேசினர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் மலைக்-குன்றின் மீது அமைந்துள்ள அபித குஜாம்பாள் சமேத ஆருணேஸ்வரர் கோவிலுக்கு சொந்த-மான இடம், கடைவீதி மற்றும் பாலக்கோடு ரோடு பகுதியில் உள்ளது. கடைவீதியில் கொலு மண்டபம் உள்ளது. கடந்த காலத்தில் நவராத்தி-ரியின் போது இந்த கொலு மண்டபத்தில் பொது-மக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் கொலு வைக்-கப்பட்டு வந்தது.
போதிய பராமரிப்பு இல்லாத நிலையில், காலப்-போக்கில் கொலு மண்டபம் பாழடைந்து காணப்-பட்டது. அதைத் தொடர்ந்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கொலு மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், அறநிலையத்துறை அதிகாரிகள் எவ்-வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சிய போக்குடன் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கொலு மண்டபத்தை சீரமைக்க உரிய அனுமதி பக்தர்கள் சார்பில் கேட்டும், அதற்கும் ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதி தர-வில்லை. கொலு மண்டபத்தை சீரமைக்க அனு-மதி தராத அறநிலையத் துறையை கண்டித்தும் அனுமதி வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் வலியு-றுத்தினர்.
