sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரி நகர்மன்ற கூட்டத்தில் துணை சேர்மன் வெளிநடப்பு

/

தர்மபுரி நகர்மன்ற கூட்டத்தில் துணை சேர்மன் வெளிநடப்பு

தர்மபுரி நகர்மன்ற கூட்டத்தில் துணை சேர்மன் வெளிநடப்பு

தர்மபுரி நகர்மன்ற கூட்டத்தில் துணை சேர்மன் வெளிநடப்பு


ADDED : ஆக 30, 2024 05:07 AM

Google News

ADDED : ஆக 30, 2024 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி நகராட்சியிலுள்ள மொத்தம், 33 வார்டுகளில், 20 வார்-டுகளில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும், 13 வார்டுகளில், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்களும் கவுன்சிலர்க-ளாக உள்ளனர். நகராட்சி சேர்மனாக, தி.மு.க.,வை சேர்ந்த லட்சு-மியும், அதே கட்சியை சேர்ந்த நித்யா துணை சேர்மனாகவும் உள்ளனர்.

துணை சேர்மன் நித்யாவிற்கு, நகரமன்ற கூட்டத்தில், உரிய இருக்கை வழங்காமல், மற்ற கவுன்சிலர்கள் இருக்கைகளை தாண்டி, கடைசியில் வழங்கப்பட்டுள்ளதாக கடந்த ஓராண்டா-கவே கூறப்பட்டு வந்தது. நேற்று, தர்மபுரி நகராட்சி அலுவல-கத்தில், நகர்மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வந்த துணை சேர்மன் நித்யா, கூட்டத்தை விட்டு உடனடியாக வெளிநடப்பு செய்தார். இதுகுறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டபோது அவர், ''நக-ராட்சி கூட்டத்தில், துணை சேர்மன் என்ற வகையில், எனக்கு முறையான மரியாதை கொடுப்பதில்லை. மேலும், கவுன்சிலர்-களை தாண்டி, தனியாக ஒதுக்கிய இடத்தில் நான் அமர வேண்டி உள்ளது. இதனால், வேறு வழியின்றி சேர்மன் நடவடிக்கையை கண்டித்து, நான் வெளிநடப்பு செய்கிறேன்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us