/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை

ADDED : மே 07, 2024 10:33 AM
தர்மபுரி: தர்மபுரி, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி(பெண்கள்), 2023- - 2024ம் கல்வியாண்டில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளி மாணவர்கள் மனோஜ் கார்த்தி, 592 மதிப்பெண்களும், தருண், 591, விஜயகணேஷ், 590, மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 100க்கு, 100 மதிப்பெண்களை மாணவர் கவின், 4- பாடப்பிரிவுகளிலும், 5- மாணவர்கள், 3- பாடப்பிரிவுகளிலும் பெற்றுள்ளனர்.
மாணவர் தருண்- பொறியியல் படிப்பிற்கான, கட் ஆப் மதிப்பெண், 200க்கு 200 பெற்று, மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். 139 மாணவர்கள் -பாடப்பிரிவுகள் வாரியாக 100க்கு, 100 - மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 590 மதிப்பெண்களுக்கு மேல், 3 பேர், 580க்கு மேல், 15 பேர், 570க்கு மேல், 51, 560க்கு மேல், 82 பேர், 550 மதிப்பெண்களுக்கு மேல், 51 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியர்கள் அனைவரையும், பள்ளி தலைவர் மணிவண்ணன், தாளாளர் செல்வி மணிவண்ணன், உதவி தலைவர் தீபக் மணிவண்ணன், செயலாளர். டாக்டர்.ராம்குமார், இயக்குனர்கள் ஷ்ரவந்தி தீபக், டாக்டர்.திவ்யா ராம்குமார், மற்றும் முதல்வர்கள், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.