/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்
/
தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்
ADDED : செப் 01, 2024 05:05 AM
தர்மபுரி: தர்மபுரி, தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில், தர்மபுரி மேற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். தர்ம-புரி எம்.பி., மணி, மேற்கு ஒன்றிய செயலாளர் சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி பேசுகையில், ''தமிழகத்தில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. கடந்த, உள்ளாட்சி தேர்தலின்போது, நம் வெற்றியை தக்க வைக்க போராட வேண்-டிய நிலை ஏற்பட்டது. இத்தேர்தலில், 100 சதவீதம், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினரை வெற்றி அடைய செய்வதுடன், வரும், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும். தற்போது இருந்தே பணிகளை தொடங்க வேண்டும்,'' என்றார். இதில், கிழக்கு மாவட்ட பொருளாளர் தங்கமணி, தி.மு.க., நிர்-வாகிகள் காவேரி, முத்துலட்சுமி, ரேணுகாதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.