/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு
/
தர்மபுரியில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு
தர்மபுரியில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு
தர்மபுரியில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு
ADDED : ஆக 23, 2024 01:22 AM
தர்மபுரி, ஆக. 23-
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணைய ஆணைப்படி வரும் ஜன., 1 ஐ தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. பின், ஜன., 6 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட ஏதுவாக பல்வேறு முன்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் முதல் கட்ட நடவடிக்கையாக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஓட்டுச்சாவடி மைய பகுதியில் வசிக்கும் அனைத்து வாக்காளர்களின் விபரங்களை இன்று ஆக., 23 முதல் வரும் அக்., 18 வரை, வீடு, வீடாக சென்று, சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளார்கள்.
கள ஆய்வின்போது, ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள மொத்த உறுப்பினர்கள், அவர்களில் எத்தனை பேர், வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர் என கண்டறிய உள்ளனர். மேலும், அனைத்து குடும்பத்திலும் விடுபட்டுள்ள வாக்காளர்களை கண்டறிந்து, அவர்களின் பெயர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சரிபார்ப்பு பணியானது, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் அனைவரும், தேர்தல் ஆணையத்தால் புதியதாக
அறிமுகப்படுத்தி உள்ள செயலி மூலமாக மேற்கொள்ள உள்ளனர்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.