/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டிரைவர் சாவில் மர்மம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
/
டிரைவர் சாவில் மர்மம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
ADDED : மே 28, 2024 08:56 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி பண்டாரசெட்டிப்பட்டி யை சேர்ந்தவர் கிருஷ்ணன், 48, டிரைவர்; கடந்த, 24 ல் மதியம் நாகர் கிணறு அருகே தாயம் விளையாட்டின் போது, கிருஷ்ணனுக்கும் திப்பிரெட்டி ஹள்ளியை சேர்ந்த பெரியசாமி, 48, சதீஷ், 35, ஆகியோரும் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர்.
வீட்டிற்கு வந்த கிருஷ்ணனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் பொம்மிடி தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இறந்தார். மனைவி கல்பனா புகார் படி, பொம்மிடி போலீசார் சந்தேகம் மரணம் என வழக்குப்பதிந்தனர். நேற்று மதியம் கல்பனா மற்றும் 50க்கும் மேற்பட்ட உறவினர்கள், கிருஷ்ணன் சாவு க்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கேட்டு, போலீசாரை கண்டித்து பொம்மிடி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
எஸ்.ஐ., விக்னேஷ் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். அரூர் டி.எஸ்.பி., ஜெகநாதன், கல்பனாவிடம் விசாரணை நடத்தினார்.