/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போதை பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
/
போதை பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 27, 2024 04:11 AM
தர்மபுரி: சர்வதேச போதை பொருட்கள் ஒழிப்பு தினத்தையொட்டி, தர்மபுரியில் போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் மற்றும் எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில், தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி, மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், போதை பொருட்களால் ஏற்படக்கூடிய தீமைகள் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.
* பொம்மிடி போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய பேரணியை எஸ்.ஐ., விக்னேஷ் துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் பாலமுருகன், உதவி தலைமை ஆசிரியர் தமிழ் தென்றல் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
* தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் நடராஜன் துவக்கி வைத்தார்.
* அரூர் தாலுகா அலுவலக வளாகத்தில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் தலைமை வகித்தார். தாசில்தார் ராதாகிருஷ்ணன், ஆர்.ஐ.,க்கள், வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர். அரூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில், அரூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் வசந்தா பேசினார்.
* பென்னாகரம் அடுத்த செங்கனுார் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், உலக போதை பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.