ADDED : மே 03, 2024 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தீர்த்தாரஹள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 70, கூலித்தொழிலாளி.
நேற்று காலை, பர்கூர் காப்புக்காடு மலைப்பகுதியிலிருந்து வந்த ஒற்றை யானை, பாலக்கோடு அடுத்த மணியக்காரன் கொட்டாய் கிராமத்திலுள்ள ஏரியில் முகாமிட்டிருந்தது. அதை வேடிக்கை பார்க்க சென்ற கிருஷ்ணனை, அந்த யானை தாக்கியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார், அவரது உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.