ADDED : ஜூன் 30, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், ஜூசேலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நேற்று மதியம், 2:20 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் சிவக்குமார் என்பவர் ஓட்டினார். அரூர் - திருவண்ணாமலை சாலையில் நாசன்கொட்டாய் முனியப்பன் கோவில் அருகே, மாலை, 4:20 மணிக்கு பஸ் சென்றபோது எதிர்பாராத விதமாக, சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது பஸ் மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து விழுந்ததுடன், பெட்டிக்கடை அருகிலிருந்த ஸ்கூட்டியும் சேதமடைந்தது. அதிர்ஷ்ட
வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.