/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொழில் துவங்க மானியத்துடன் கடனுதவி தகுதியுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு
/
தொழில் துவங்க மானியத்துடன் கடனுதவி தகுதியுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு
தொழில் துவங்க மானியத்துடன் கடனுதவி தகுதியுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு
தொழில் துவங்க மானியத்துடன் கடனுதவி தகுதியுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 27, 2024 04:13 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்காக, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் என்னும் சுயதொழில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தர்மபுரி தொழில் மையம் சார்பில் நடப்பு ஆண்டுக்கென, 36 நபர்களுக்கு, 3.50 கோடி ரூபாய் மானியம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு குறைந்த பட்சம், 10 லட்சத்துக்கு மேல் அதிகபட்சமாக,
5 கோடி ரூபாய் வரை கடனாக வழங்கப்படும். அனைத்து உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் துவங்கலாம். வணிக வங்கிகள் மூலம் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் ஆகியவற்றின் மூலம் கடன் பெற, மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்தப்படும் தேர்வு குழுவினரால் பரிந்துரை செய்யப்படும். திட்ட மதிப்பீட்டில், 25 சதவீதம் அதிகபட்சமாக, 75 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கூடுதலாக, 10 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க, பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி தகுதிபெற்றவராக இருக்க வேண்டும். 3 ஆண்டுகளாக தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர், 21 முதல், 55 வயது வரை இருக்க வேண்டும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் இலவசமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 04342-230892, 89255 33941, 89255 33942 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.