/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு ஊழியர்கள் சங்க முதல் மாவட்ட மாநாடு
/
அரசு ஊழியர்கள் சங்க முதல் மாவட்ட மாநாடு
ADDED : செப் 15, 2024 01:57 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின், முதல் மாவட்ட மாநாடு, தர்மபுரியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மாது தலைமை வகித்தார். தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்க முன்னாள் மாநில தலைவர் சிவப்பிரகாசம் சிறப்புறையாற்றினார். சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கி-ணைப்பாளர் சந்திர
சேகரன்,
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி ஆகியோர் பேசினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சி.பி.எஸ்., திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும். அரசு மருத்து-வமனைகளில் செயல்படும் எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் ஆலோ-சனை மையங்களை மூடக்கூடாது. வருவாய்த்துறை கிராம ஊழி-யர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக, 15,700 ரூபாய் வழங்க வேண்டும். அரசு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பு திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன.