/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேசிய கைத்தறி தினம் 7ல் இலவச மருத்துவ முகாம்
/
தேசிய கைத்தறி தினம் 7ல் இலவச மருத்துவ முகாம்
ADDED : ஆக 05, 2024 02:18 AM
தர்மபுரி,
தர்மபுரி கலெக்டர் சாந்தி விடுத்துள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்டத்தில், 10-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கைத்தறி துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து நடத்தும், கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம், நாளை மறுநாள் (புதன்கிழமை) அன்று காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை, எஸ்.ஏ.5 லளிகம் தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடக்கவுள்ளது.
இந்த மருத்துவ முகாமில், இருதய நோய், கண், காது, மூக்கு, தொண்டை, ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறிதல், ரத்த அழுத்தம் போன்ற பொதுமருத்துவ பரிசோதனை மற்றும் பொது சுகாதாரம், மகளிர் சுகாதாரம் மற்றும் வரும்முன் காப்போம் நடவடிக்கை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும்.
எனவே, சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள கூட்டுறவு மற்றும் தனியார் நெசவாளர்கள், நெசவு சார்ந்த உபதொழில் புரிபவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். மருத்துவ முகாமில், நெசவாளர்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.