/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோவில் விழாவில் தங்க செயின் பறிப்பு
/
கோவில் விழாவில் தங்க செயின் பறிப்பு
ADDED : ஜூலை 14, 2024 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த மலர், 54; இவர் கடந்த, 3 அன்று ஜெகதீசன் தெருவிலுள்ள முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றார்.
அப்போது, தீர்த்தம் தெளித்த போது, கூட்டநெரிசலில் அவரது கழுத்திலிருந்த, 2.5 பவுன் செயின் திருடு போனது. அதேபோல், பழைய தர்மபுரி அடுத்த, சின்னதோப்பு பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம், 53, என்-பவரின், 2.5 பவுன் செயினும் திருடு போனது. புகார்படி தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.