/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கடும் வெயில் தாக்கம்:மாடுகளுக்கு பசும்போர்வை
/
கடும் வெயில் தாக்கம்:மாடுகளுக்கு பசும்போர்வை
ADDED : மே 10, 2024 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி:தர்மபுரியில், தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, 106 டிகிரி பாரன்ஹீட் அளவை தாண்டி வெப்பம் வீசுகிறது.
இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். கடந்த, 2 நாட்களாக இரவில், மாவட்டம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. ஆனாலும் பகலில் கடும் புழுக்கம் ஏற்படுகிறது. விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து காக்க, பசுமை குடில் அமைக்க பயன்படுத்தப்படும் பசும்போர்வையை அமைத்து, அதன் அடியில் மாடுகளை கட்டி வைக்கின்றனர்.