/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் தொடர் கோடை மழையால் வயலில் சாய்ந்து வீணாகும் நெற்பயிர்கள்

ADDED : மே 10, 2024 02:44 AM
தர்மபுரி;தர்மபுரி மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால், விவசாயிகள் சாகுபடி செய்த நெல் பயிர்கள் வயலில் சாய்ந்து வருகிறது.கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தர்மபுரி மாவட்டத்தில், 106 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் வீசுகின்றது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு வருகின்றன.
ஒரு சில ஏரிகளில் இருந்த நீரை கொண்டு, சில விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். தர்மபுரி, ராமக்காள் ஏரி பாசன வாய்க்கால் விவசாயிகள், ஏரியில் இருந்த நீரை கொண்டு நெல் சாகுபடி செய்தனர். நெல் தற்போது நன்றாக வளர்ந்து, அறுவடைக்கு தயாராக இருந்தது. கடந்த, 2 நாட்களாக தர்மபுரியில் பலத்த காற்றுடன், கோடை மழை பெய்து வருவதால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து, உதிர்ந்து வீணாகி வருகின்றன. இதனால், நெல் சாகுபடி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு, இழப்பீடு வழங்க வேண்டுமென, தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.