/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி கலெக்டர் ஆபீஸ் முன்பு பொதுமக்களுக்கு கோரிக்கை மனுக்கள் எழுத நிழற்குடை
/
தர்மபுரி கலெக்டர் ஆபீஸ் முன்பு பொதுமக்களுக்கு கோரிக்கை மனுக்கள் எழுத நிழற்குடை
தர்மபுரி கலெக்டர் ஆபீஸ் முன்பு பொதுமக்களுக்கு கோரிக்கை மனுக்கள் எழுத நிழற்குடை
தர்மபுரி கலெக்டர் ஆபீஸ் முன்பு பொதுமக்களுக்கு கோரிக்கை மனுக்கள் எழுத நிழற்குடை
ADDED : மே 07, 2024 10:34 AM
தர்மபுரி: 'காலைகதிர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் வெளியே, இலவசமாக கோரிக்கை மனுக்கள் எழுதவும், நிழற்குடையும் அமைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர் நாளான திங்கட்கிழமையில் பொதுமக்கள் மனு அளிக்க வருகின்றனர். கிராம பகுதியில் இருந்து வரும், ஏழை எளிய மக்களுக்காக, மகளிர் திட்டம் சார்பில் நிழல் குடைகள் அமைத்து, இலவசமாக மனு எழுதி கொடுக்கப்பட்டது.
லோக்சபா தேர்தல் அறிவித்த மார்ச், 16 முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்படி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படவில்லை. ஆனால், கலெக்டர் அலுவலகம் வெளியே, பொதுமக்கள் தங்கள் பகுதி பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து, மனுக்கள் அளிக்க மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டது. இதில், பொதுமக்கள் மனுக்களை போட்டுச் சென்றனர்.
இந்நிலையில், மனு எழுத வரும் கிராம மக்களிடம், கலெக்டர் அலுவலகம் முன், தனி நபர்கள் சிலர் பணம் பெற்றுக்கொண்டு, வெயிலில் அமர்ந்து மனு எழுதி கொடுத்தனர். பொதுமக்களும் வெயிலில் காத்திருந்தனர். இதுகுறித்து, கடந்த வாரம், 'காலைக்கதிர்' நாளிதழிலில் செய்தி வெளியாகியது. இந்நிலையில் நேற்று, அரசு மகளிர் திட்டம் சார்பில், நிழற்குடைகள் அமைத்து, இலவசமாக மனு எழுதி கொடுக்கப்பட்டது. இதனால், பொமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.