/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.85 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் ஆய்வு
/
ரூ.85 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் ஆய்வு
ADDED : செப் 15, 2024 01:04 AM
ரூ.85 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் ஆய்வு
பாப்பிரெட்டிப்பட்டி, செப். 15---
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பொம்மிடி ஊராட்சிக்கு உட்பட்ட குமரிமடுவு, செம்பியானுார், வெள்ளாளப்பட்டி ஆகிய கிராமங்களில், 46 லட்சம் ரூபாய் மதிப்பில், மூன்று தடுப்பணைகள், துரிஞ்சிப்பட்டி, வடசந்தையூர் பகுதியில், 16 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் கல் பதித்தல் பணி நடந்துள்ளது. குமரி
மடுவு,கோட்டமேடு, துரிஞ்சிப்பட்டி கிராமங்களில், 22 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி, குடிநீர் தொட்டி அமைக்கும் பணி என மொத்தம், 85 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. மொரப்பூர் கோட்ட உதவி செயற்பொறியாளர் வெங்கடாசலம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய உதவி பொறியாளர் திலீபன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.