/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்க அறிவுறுத்தல்
/
ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்க அறிவுறுத்தல்
ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்க அறிவுறுத்தல்
ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்க அறிவுறுத்தல்
ADDED : செப் 03, 2024 05:17 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செயல்படும், அரசு ஆதிதிரா-விடர் நல மாணவியர் விடுதி, தனியார் கட்டடத்தில் தற்காலிக-மாக செயல்பட்டு வருகிறது.
இதில், 4-ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும், 42 மாணவியர் தங்கி படிக்கின்றனர். அதை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி நேற்று, தர்மபுரி கலெக்டர் சாந்தி முன்னிலையில் பார்வையிட்டார். மாணவியர் தங்கும் அறை, உணவருந்தும் கூடம், சமையலறை மற்றும் கழிப்-பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். மேலும், புதிய கட்டடம் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, ஒட்டப்பட்டியில் புதிதாக, 400 மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில், 6.46 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு அறைக்கு, 15 பேர் வரை தங்கும் அளவிற்கு, தரைத்தளத்தில், 14, முதல் தளத்தில், 14 அறைகள் மற்றும், 200 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் விடுதி கட்-டப்பட்டுள்ளது. அங்கு, மாணவர்களுக்கு வழங்க சமைத்து வைத்-திருந்த உணவின் தரம் குறித்து அமைச்சர் கயல்விழி பரிசோ-தித்தார்.மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன், தர்மபுரி நகராட்சி சேர்மன் லட்-சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொ) செம்மலை, பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் கண்ணன், தாட்கோ செயற்பொறியாளர் நடராஜன் உட்பட அரசு அலுவ-லர்கள் உடனிருந்தனர்.