/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேர்தலை நேர்மையாக நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
/
தேர்தலை நேர்மையாக நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
தேர்தலை நேர்மையாக நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
தேர்தலை நேர்மையாக நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
ADDED : ஏப் 18, 2024 01:34 AM
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில், 71 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை. இது. பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
இதில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகள் மற்றும் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் மண்டல அலுவலர்கள் போலீசார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய கலெக்டர் சாந்தி, ''தேர்தலை நியாயமான முறையில் பாரபட்சமின்றி நேர்மையாக நடத்த வேண்டும். எந்த பிரச்னைக்கும் இடமளிக்கக்கூடாது. மக்கள் அச்சமின்றி ஓட்டுபோட ஏதுவாக அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். கட்சி, ஜாதிக்கு அப்பாற்பட்டு அனைவரும் அரசு அதிகாரிகள் என்பதை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும்.
எவ்வித பதட்டமும் இன்றி, ஓட்டுச்சாவடிகள் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட வேண்டும். இதை மண்டல அலுவலர்கள், ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்,'' என்றார்.
கூட்டத்தில், கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பிரியா, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செர்லி ஏஞ்சலா,
டி.எஸ்.பி., ஜெகநாதன், தாசில்தார்
சரவணன், தேர்தல் துணை தாசில்தார்
சிவஞானம், ஆர்.ஐ., கார்த்திக், இன்ஸ்பெக்டர்கள் சுகுமார், அம்சவள்ளி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

