/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் போலீஸ் ஸ்டேஷனில் அமலாக்கத்துறை ஐ.ஜி., ஆய்வு
/
அரூர் போலீஸ் ஸ்டேஷனில் அமலாக்கத்துறை ஐ.ஜி., ஆய்வு
ADDED : செப் 01, 2024 05:05 AM
அரூர்: அரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று மதியம், 3:00 மணிக்கு, தமிழ்நாடு அமலாக்கத்துறை ஐ.ஜி., மயில்வாகனன் வந்தார்.
அங்-குள்ள பதிவேடுகளை ஆய்வு செய்து, ஸ்டேஷன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். கடந்த காலங்களில் பதிவு செய்துள்ள வழக்குகள் விபரம், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்-டுள்ள வழக்குகள், தண்டனை பெற்று கொடுத்த வழக்குகள் குறித்த விபரங்களை ஐ.ஜி., ஆய்வு மேற்கொண்டார். பின், 5:00 மணிக்கு புறப்பட்டுச் சென்றார்.ஆய்வின்போது, தர்மபுரி எஸ்.பி., மகேஸ்வரன், அரூர் டி.எஸ்.பி., ஜெகன்நாதன், இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் ஆகியோர் உடனிருந்தனர். தமிழகம் முழுவதும் சிறந்த போலீஸ் ஸ்டேஷன் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக அரூர் போலீஸ் ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு மாவட்ட எஸ்.பி., பரிந்துரை செய்திருந்தார். அதன் அடிப்படையில், ஐ.ஜி., நேரில் ஆய்வு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.