/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காலபைரவர் கோவில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுமான பணி ஆய்வு
/
காலபைரவர் கோவில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுமான பணி ஆய்வு
காலபைரவர் கோவில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுமான பணி ஆய்வு
காலபைரவர் கோவில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுமான பணி ஆய்வு
ADDED : ஆக 17, 2024 04:30 AM
தர்மபுரி: அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் அருகில், 1.79 கோடி ரூபாய் மதிப்பில், கட்டப்பட்டு வரும், பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுமான பணியை, தர்மபுரி கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.
தர்மபுரி மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக காலபைரவர் கோவில் உள்ளது. இது, 1,200 ஆண்டு பழமை வாய்ந்தது. இங்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெண்
பூசணியில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். மேலும், இரவு, 10 மணிக்கு மேல் சத்ருசம்ஹார யாகமும், குருதி பூஜையும் நடத்துவது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
ஹிந்து சமய அறநிலையத்துறை, 2023 - 24 க்கான மானியக் கோரிக்கையின் போது, தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்படும் என அறிவித்தது. இதை செயல்படுத்தும் விதமாக, இக்கோவிலின் உபகோவிலான, சித்தி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், 1.79 கோடி ரூபாய் மதிப்பில், பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கான பணி நடந்து வருகிறது. பக்தர்கள் தங்கும் விடுதி கட்டடம், குளியலறை, கழிவறை உள்ளிட்ட கட்டுமான பணிகளை பார்வையிட்ட, கலெக்டர் சாந்தி, பணிகளை தரமாக குறிப்பிட்ட காலத்தில் முடித்து, பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, நல்லம்பள்ளி சேர்மன் மகேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் மாது, தர்மபுரி மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கௌதமன், தாசில்தார் சிவகுமார், சண்முகசுந்தரம், செயல் அலுவலர் ஜீவானந்தம் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

