/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கடன் தொகை திருப்பி தராததால் உறவினர் கடத்தல்: 5 பேர் கைது
/
கடன் தொகை திருப்பி தராததால் உறவினர் கடத்தல்: 5 பேர் கைது
கடன் தொகை திருப்பி தராததால் உறவினர் கடத்தல்: 5 பேர் கைது
கடன் தொகை திருப்பி தராததால் உறவினர் கடத்தல்: 5 பேர் கைது
ADDED : மே 05, 2024 03:30 AM
காரிமங்கலம்: கடனை திருப்பி தராததால், கூலி தொழிலாளியை காரில் வைத்து கடத்திய உறவினர் உட்பட, 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், நக்கல்பட்டி அடுத்த ஒண்டியூரை சேர்ந்த பாலாஜி, 34, சேலத்தில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி, ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, மனைவியுடன் விவாகரத்தானது. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு, மாமன் உறவு முறையான, கிருஷ்ணகிரி மாவட்டம், கரடி கொள்ளப்பட்டியை சேர்ந்த மாதேஷ், 35, என்பவரிடம், 34 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
கொடுத்த பணத்தை பல முறை திரும்ப கேட்டும் பாலாஜி தராததால், ஆத்திரமடைந்த மாதேஷ் தனது கூட்டாளிகளான ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சாந்தகுமார், 44, தர்மபுரியை சேர்ந்த கார்த்திக், 39, செல்வகமல், 46, ராஜ்கமல், 27, ஆகியோருடன் கூட்டாக சேர்ந்து கடந்த, 3ல், காலை வீட்டை விட்டு வெளியே வந்த பாலாஜியை சொகுசு காரில் கடத்தி சென்றனர். இதில், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பைபாஸில் உள்ள தனியார் லாட்ஜில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தப்பி வந்த பாலாஜி, காரிமங்கலம் போலீஸில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாதேஷ் உட்பட, 5 பேரையும் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் மீது ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட, 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.