/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நாளந்தா சர்வதேச பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி
/
நாளந்தா சர்வதேச பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி
ADDED : ஆக 29, 2024 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, ஆக. 29-
கிருஷ்ணகிரி நாளந்தா சர்வதேச பொதுப்பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதில், பள்ளி மாணவ, மாணவியர் கிருஷ்ணர் மற்றும் ராதையர் வேடம் அணிந்து வந்திருந்தனர். சந்தனம், குங்குமம் பூசி, பட்டாடை அணிந்தும், கையில் புல்லாங்குழலுடன் விழாவில் பங்கேற்றனர்.
கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்த மாணவ, மாணவியர் நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர்.
விழா ஏற்பாடுகளை பள்ளியின் நிறுவனர் கொங்கரசன், தாளாளர் சாமூண்டீஸ்வரி கொங்கரசன், பள்ளியின் நிர்வாக இயக்குனர்கள் வழக்கறிஞர் கவுதம், மருத்துவர் புவியரசன் மற்றும் பள்ளியின் கல்வி இயக்குனர், முதல்வர், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.