/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மனைவியை கல்லால் அடித்து கொன்ற தொழிலாளி கைது
/
மனைவியை கல்லால் அடித்து கொன்ற தொழிலாளி கைது
ADDED : ஆக 28, 2024 08:02 PM
கம்பைநல்லுார்:தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த உச்சியம்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன், 46; கூலித்தொழிலாளி. இவர் மனைவி லட்சுமி, 42. நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு இருவரும் டி.வி.எக்ஸ். எக்ஸ்.எல்., மொபட்டில் வெள்ளோலையிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றனர்.
மாலை, 4:00 மணிக்கு உச்சியம்பட்டியை சேர்ந்த ஊர்க்கவுண்டர் சரவணன் என்பவருக்கு மொபைல்போனில் பேசிய காளியப்பன், மனைவி லட்சுமியை கோவில் அருகில் உள்ள வனப்பகுதியில் கல்லால் அடித்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார்.
கம்பைநல்லுார் போலீசார் விசாரணையில், குடிபோதையில் இருந்த காளியப்பன், மனைவியை கொலை செய்யவில்லை எனவும், அவர் வெளியூர் வேலைக்கு சென்று விட்டதாகவும் கூறியுள்ளார். நேற்று காலை கோவில் அருகிலுள்ள வனப்பகுதியில், கொலை செய்யப்பட்டு கிடந்த லட்சுமியின் உடலை மீட்ட போலீசார், காளியப்பனிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், நேற்று கோவிலுக்கு சென்றபோது தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்து லட்சுமியை அவர் கல்லால் அடித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. காளியப்பனை போலீசார் கைது செய்தனர்.