ADDED : ஜூலை 02, 2024 11:00 AM
தர்மபுரி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள, 3 புதிய குற்றவியல் சட்டங்கள், நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதை கண்டித்து, தர்மபுரி நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் சிவன் தலை மை வகித்தார். நிர்வாகிகள் தர்மன், சதாசிவம், முனிராஜ், குமரன் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல், தர்மபுரி வக்கீல் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
* அரூரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் பணிபுரியும் வக்கீல்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* பாப்பிரெட்டிப்பட்டி வக்கீல்கள் சங்கம் சார்பில், சார்பு நீதிமன்றம் முன்பு சங்க தலைவர் கோபி தலைமையில் உண்ணாவிரத நடந்தது. நிர்வாகிகள் கனகராஜ், வேலு, கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சங்க செயலாளர் பூவன் வரவேற்றார். போராட்டத்தால் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களில், வக்கீல்கள் இல்லாமல் வெறிச்சோடியது.