/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்
/
வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்
ADDED : ஆக 29, 2024 02:17 AM
வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்
தர்மபுரி, ஆக. 29-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தர்மபுரியில் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர், நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட தலைவர் சிவன் தலைமை வகித்தார். தர்மபுரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர் சார்பில், தர்மபுரி ஒருங்கணைந்த நீதிமன்ற வளாகத்தில், மனித சங்கலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* மத்திய அரசு கொண்டு வந்துள்ள, 3 புதிய சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவினர், தொடர் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். அரூரில், சார்பு நீதிமன்ற வளாகம் முன், மனித சங்கிலி மற்றும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபட்டனர். இதில் வக்கீல்கள் சங்க தலைவர் முத்துராஜா, செயலாளர் தவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* பாப்பிரெட்டிப்பட்டியில், வக்கீல்கள் சங்க தலைவர் கோபி தலைமையில், மனித சங்கிலி போராட்டம் நடந்தது. செயலாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

