ADDED : மார் 03, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுந்துவர் சாவு
பென்னாகரம்: பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகன் கிரிதரன், 25. டிரைவர். நேற்று முன்தினம் இரவு, பணியை முடித்து விட்டு பருவதனஅள்ளியிலிருந்து வீட்டிற்கு சென்றார். அம்பேத்கர் சாலை முதல், ஒகேனக்கல் மூன்று ரோடு வரை, சாலை விரிவாக்கம் மற்றும் சிறு பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.
இதனால், சாலைக்கு இடையே ஆங்காங்கே குழி தோண்டப்பட்டுள்ளதால், வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜி.ஹெச்., அருகே கிரிதரன் சென்ற பைக் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து குழியில் விழுந்ததில் படுகாயமடைந்து உயிரிழந்தார். பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.