ADDED : ஆக 09, 2024 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி அடுத்த குப்பாகவுண்டர் தெருவில் ஓம்சக்தி மாரி-யம்மன் கோவில் ஆடி திருவிழா கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பின், அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடந்தன. விழாவின் முக்கிய நாளான நேற்று, இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். வெளிமாநிலத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட கலைக்குழுவினரின் நிகழ்ச்சி நடந்தது. இதில், குப்பாகவுண்டர் தெரு மட்டுமின்றி, மாவட்டம் முழு-வதும் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். விழா ஏற்பாடுகளை, ஊர்மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்-தனர்.