/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் மாயம்
/
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் மாயம்
ADDED : மே 26, 2024 07:40 AM
தர்மபுரி : அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் மாயமானதால், அவரை கண்டுபிடித்து தரக்கோரி அவரின் மனைவி சிவகாமி, தர்மபுரி எஸ்.பி.. அலுவலகத்தில் உறவினர்களுடன் சென்று மனு அளித்தார்.
இதில், அவர் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கீழ்மொரப்பரை சேர்ந்த கூலித்தொழிலாளி பெருமாள், 42; இவர் கடந்த, 18- அன்று மாலை, 5:00 மணிக்கு தர்மபுரி- - அரூர் சாலையில், ஜடையம்பட்டி பகுதியில் விபத்தில் சிக்கினார். அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம், அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் கடந்த, 19 ல் மாயமானார். அவரை கண்டுபிடித்து தர வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.