ADDED : மே 04, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பூர் : தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே, தேசிய நெடுஞ்சாலை தரைமட்ட பாலப் பகுதியில், கடந்த, 1 அன்று பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டு, உடலில் காயங்களோடு மர்மமான முறையில், இறந்து கிடந்தார்.
பெண்ணின் சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாளையம் வி.ஏ.ஓ., கிருஷ்ணன் கொடுத்த புகார்படி, தொப்பூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இறந்து கிடந்த பெண், தர்மபுரி மாவட்டம், நத்தம்புதூரை சேர்ந்த மணி என்பவரின் மனைவி மகேஸ்வரி, 40, என்பது தெரியவந்தது. மணி பெங்களூரில் இரும்பு கடையில் வேலை செய்து வருகிறார்.சந்தேகத்தின் பேரில், ஒருவரிடம் தொப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.