ADDED : ஆக 26, 2024 08:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, பாம்பாறு டேம் ராதா ருக்மணி சமேத வாசுதேவன் கண்ணன் கோவிலில், கோகுலாஷ்டமியை முன்னிட்டு நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம் சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த, 5 நாட்களாக நடந்து வந்தது.
நேற்று நிறைவு விழா நடந்தது. இதில் உலக நன்மைக்காகவும், வைணவ திருத்தலங்கள் மேன்மை அடையவும் பக்தர்கள் எல்லா நலமும் பெறவும், வைணவ பக்தர்கள் ஒன்றிணைந்து, சுவாமிக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்தனர். ராதா ருக்மணி சமேத வாசுதேவ கண்ணனுக்கு கோகுல அஷ்டமியை முன்னிட்டு அதிகாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், திருமஞ்சனம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

