தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மா.திறனாளிகளின் தேவை அறியும் முகாம்

மா.திறனாளிகளின் தேவை அறியும் முகாம்

மா.திறனாளிகளின் தேவை அறியும் முகாம்


ADDED : நவ 29, 2026 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கான தேவைகளை கண்டறியும் முகாம், வட்டார இயக்க மேலாண்மை அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவுரி சங்கர் முன்னிலை வகித்தார்.

முகாமில், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை தேவைப்படும் மாற்று திறனாளிகளை சிறப்பு மருத்துவர்கள் ஆய்வு செய்து, மருத்துவச் சான்றிதழ்கள் வழங்கினர். ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, கண் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் அடையாள அட்டை வழங்க, பதிவுகள் மேற்கொள்ளுதல், யூ.டி.ஐ.டி., புதுப்பித்தல், புதியதாக பதிவு செய்தல் உட்பட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக்கடன் உதவி, உபகரணங்கள், செயற்கை கால் அளவு எடுத்தல், இணைய சேவை, பேருந்து அட்டை பதிவு மேற்கொள்ளுதல் வேண்டி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. வட்டார ஒருங்கிணைப்பாளர் ரத்தினவேல், கவிப்

பிரியா அருணா அமிர்த வள்ளி மற்றும் மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us