ADDED : மே 06, 2024 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: இந்தாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு, தர்மபுரி மாவட்டத்தில் நேற்று, 8 மையங்களில் நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம், 5,758 பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில், நேற்று நடந்த தேர்வில், 136 மாணவர்கள், 'ஆப்சென்ட்' ஆன நிலையில், 5,622 பேர் தேர்வு எழுதினர்.
இதில், தேர்வெழுதிய மாணவர்கள், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்கள் மற்றும் விலங்கியல், உயிரியல் பாடப்பிரிவுகளில் சுலபமான கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.