ADDED : செப் 12, 2026 06:13 AM
அ நிறம் | அளவு
அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றிய அலு-வலகத்தில் நேற்று மதியம், 12:00 மணிக்கு ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டம் முடிவடைந்த நிலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தப் போவதாக தகவல் பரவியது. இதையடுத்து, அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதிகாரிகள் அவசரமாக அலுவலக ஜீப்புகளில் ஏறி புறப்-பட்டுச் சென்றனர். பணியில் இருந்த அலுவ-லர்கள் மற்றும் பணியாளர்களும் ஒவ்வொருவ-ராக அலுவலகத்தை விட்டு வெளியேறினர். இதனால், அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்-டது. கடந்த ஆக., 27ம் தேதி அரூர் தாலுகா அலுவல-கத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்-கொண்டது குறிப்பிடத்தக்கது.
