/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல் - தேன்கனிக்கோட்டை வாகன போக்குவரத்து துண்டிப்பு
/
ஒகேனக்கல் - தேன்கனிக்கோட்டை வாகன போக்குவரத்து துண்டிப்பு
ஒகேனக்கல் - தேன்கனிக்கோட்டை வாகன போக்குவரத்து துண்டிப்பு
ஒகேனக்கல் - தேன்கனிக்கோட்டை வாகன போக்குவரத்து துண்டிப்பு
ADDED : ஆக 01, 2024 10:59 PM
ஒகேனக்கல்:ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று, 2.10 லட்சம் கன அடியாக அதிகரித்ததால், ஆலம்பாடி அருகே சாலையை மூழ்கடித்து, தண்ணீர் தேங்கி உள்ளது, இதனால், அவ்வழியே செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இச்சாலை ஒகேனக்கல்லில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், பிலிகுண்டுலு நாட்றாம்பாளையம், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டையை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. சாலையில் தண்ணீர் தேங்கியதால், அனைத்து வாகன போக்குவரத்தும் முடங்கியது. நேற்று, பென்னாகரத்திலிருந்து ஒகேனக்கல் வழியாக சென்ற பஸ் சாணர்கொட்டாய் பகுதியிலேயே நிறுத்தப்பட்டது.
அதேபோல், அஞ்செட்டியிலிருந்து ஒகேனக்கல் நோக்கி வந்த அரசு பஸ் ஆலம்பாடியிலே நிறுத்தப்பட்டது. இதையடுத்து பஸ்ஸில் பயணம் செய்தோர் வனப்பகுதியில் சென்று மாறி, மாறி பயணித்தனர். சாலையில் தேங்கிய தண்ணீர் குறையும் வரை அவ்வழியே போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.