/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒரு நாள் இடைவெளியில் ஒகேனக்கல் குடிநீர் சப்ளை
/
ஒரு நாள் இடைவெளியில் ஒகேனக்கல் குடிநீர் சப்ளை
ADDED : ஜூலை 21, 2024 10:55 AM
தர்மபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில், நீர்வரத்து அதிகமாக உள்ளதால், ஒரு நாள் விட்டு ஒரு மட்டும், ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்படும் என, தர்மபுரி கலெக்டர் மாவட்ட சாந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால், நீர் கலங்கலாக உள்ளதால், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம், முழுமையாக வரையறுக்கப்பட்ட குடிநீர் அளவான, 145 எம்.எல்.டி., நீரை பம்ப் செய்ய முடியவில்லை.
இதன் காரணமாக, தர்மபுரி மாவட்டத்துக்கு ஒரு நாளும், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஒரு நாளும் என, ஒரு நாள் விட்டு, ஒரு நாள் ஒகேனக்கல் குடிநீர் வழங்க முடியும். ஒகேனக்கல் காவிரியாற்றில் கலங்கலான தன்மை சரியாகும் வரை, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு, ஊரக மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர், அலுவலர்கள் உள்ளூர் நீர் ஆதாரங்களை கொண்டு, பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க வேண்டும்.
பொதுமக்கள் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும், குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.