/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
2,000 கன அடியாக உயர்ந்த ஒகேனக்கல் நீர்வரத்து
/
2,000 கன அடியாக உயர்ந்த ஒகேனக்கல் நீர்வரத்து
ADDED : ஜூன் 07, 2024 07:15 PM
ஒகேனக்கல்:தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாமையம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை காரணமாக, ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, வினாடிக்கு, 1,500 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 2,000 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்தது.
இதனால், ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவர்பாணி, மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால், சுற்றுலா பயணியர் அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும், ஒகேனக்கல் எழில் மிகு அழகை கண்டு ரசித்து, மகிழ்ந்தனர்.