/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நிறம் மாறி வந்த குடிநீரால் நகராட்சி பகுதி மக்கள் அதிர்ச்சி
/
நிறம் மாறி வந்த குடிநீரால் நகராட்சி பகுதி மக்கள் அதிர்ச்சி
நிறம் மாறி வந்த குடிநீரால் நகராட்சி பகுதி மக்கள் அதிர்ச்சி
நிறம் மாறி வந்த குடிநீரால் நகராட்சி பகுதி மக்கள் அதிர்ச்சி
ADDED : ஜூன் 09, 2024 04:06 AM
தர்மபுரி: தர்மபுரி, நகராட்சியிலுள்ள பகுதிகளில், ஒகேனக்கல் குடிநீர் நிறம் மாறி வந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தர்மபுரி நகராட்சியில், 33 வார்டுகளில், வினியோகம் செய்யப்படும் ஒகேனக்கல் குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை. மேலும், தர்மபுரி நகராட்சிக்கு, பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி குடிநீரும் முறையாக வழங்கப்படாததால், மக்கள் பல இடங்களில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். கோடை மழைக்கு பின் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தற்போது, தர்மபுரி நகராட்சி பகுதிகளில் ஓரளவுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்
பட்டது. சில பகுதிகளில் குடிநீர் மிகவும் கலங்கலாக வந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து, நகராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது, 'கர்நாடகா மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில், மழை பெய்து வரும் நிலையில், புதியதாக தண்ணீர் வர துவங்கியுள்ளது. இதனால், சில நாட்களுக்கு குடிநீர் நிறம்மாறி வரும்' என தெரிவித்தனர்.